ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, September 11, 2009

* © All rights reserved. *


கிழவி கைபிடித்து நடக்க உதவிய
வாலிபனின் புகைப்படம்

யாருமில்லா காட்டின் இருட்டு வெளிச்சத்தை
உணர்த்திய வண்ணமிகு ஓவியம்

பத்து பேருக்கு ஒன்று விகிதத்தில்
பணம் விழும் பிச்சைக்காரன் கவிதை

எல்லாமுமே காசாகிப் போனது

இயற்கையைத் திருடிய ஒவ்வொன்றிலும்
முத்திரையிடுகிறேன்
இதன் உரிமை எனக்கே என்று

கிழவிக்கும், காட்டிற்கும், பிச்சைக்காரனுக்கும்
பங்கு தராமல்.....