ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Wednesday, November 15, 2006

"அறிவுரை"

பாட்டி ஊட்டும் ஜாதியில் சிக்காதே...
அம்மா ஊட்டும் ஏற்றத்தாழ்வில் சிக்காதே...
அத்தை மகளின் ஆசை வார்த்தையில் சிக்காதே...
அரசியலாகும் காதலில் சிக்காதே...
அடிமைப்படும் வேலையில் சிக்காதே...
அறிவில்லாதவன் கூறும் அறிவுரையில் சிக்காதே...
அடிமுட்டாள் கூறும் ஆலோசனையில் சிக்காதே...
அடங்கியே நடப்பவர்களின் அணிவகுப்பில் சிக்காதே...
மொத்தத்தில் என்னைப் போல் இராதே...மகனே..!

பாசம்

பெண்பிணம்
மகன் அழுகிறான்
சொத்துக்கான சந்தோஷத்துடன்
மகள் அழுகிறாள்
நகைக்கான் சந்தோஷத்துடன்
மருமகள் அழுகிறாள்
கொத்துச்சாவியின் சந்தோஷத்துடன்
பேரனும் அழுகிறான்
பாட்டியை எந்த காக்கா தூக்கிப்
போனதென்று தெரியாமல்.......