ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Thursday, January 04, 2007

*ஒரே ஒரு முறை.....காதல்*

அடுத்த வீட்டு குழந்தை அஞ்சியதற்காய்
என் ஆறுமாத சோகத்தை ஒழித்துவிட்டு
விட்ட பாடங்களை மவுனமாய் படிக்க
தவறுதலாய் அவள் பெயரையே உச்சரிக்க....
சரி எழுதியாவது தீர்க்கலாமென்றெண்ணி எழுத முயல
தவறுதலாய் அவள் பெயரையே எழுத....
எழுதும் பெயரின் கடைசி எழுத்தில் மாண்ட காதல் மனதில் வர
அவள் பெயரையே மீண்டும் எழுத நினைக்க....
மீண்டும் தவறுதலாய் எழுதுகிறேன்...
'என் உயிர்' என்று..
மறுபடியும் வளர்கிறது தாடி.....