ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, July 09, 2010

Friday, September 11, 2009

* © All rights reserved. *


கிழவி கைபிடித்து நடக்க உதவிய
வாலிபனின் புகைப்படம்

யாருமில்லா காட்டின் இருட்டு வெளிச்சத்தை
உணர்த்திய வண்ணமிகு ஓவியம்

பத்து பேருக்கு ஒன்று விகிதத்தில்
பணம் விழும் பிச்சைக்காரன் கவிதை

எல்லாமுமே காசாகிப் போனது

இயற்கையைத் திருடிய ஒவ்வொன்றிலும்
முத்திரையிடுகிறேன்
இதன் உரிமை எனக்கே என்று

கிழவிக்கும், காட்டிற்கும், பிச்சைக்காரனுக்கும்
பங்கு தராமல்.....

Friday, August 31, 2007

"சதுரங்க வாழ்க்கை"

யானையை வெட்டி..
குதிரையைக் கொன்று..
ராணியைக் களவாடி..
ராஜாவை அலைக்கழித்து....
நானே வெல்ல
நான் மட்டுமே இருபுறமுமாய்...

*******

ஒன்பது வருடமாய் காத்திருக்கிறேன்
உனைப்போலவே...
என்றாவது ஈனுவேன்...
புத்தக மயிலிறகிடம்
பிள்ளையில்லாத தாய்...

Thursday, August 09, 2007

உறவின் மனதுகளில்
பிரிந்த வரவேற்பு
சென்று சேர்ந்தது
மிதியடியின் மேலே....

*********

விரைவாய்த்தான்
முடிகிறது
பல காதல்கள்
விரைவு வண்டியில்....

*********


வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
இறந்த பின்னே
இறைவன் அனுப்பினான்
சிங்களவனாக...?!

Monday, July 30, 2007

மர்மக் கடிதத்தில்,
"கடற்கரைக்கு வாருங்கள்"
--உன் அன்புக்காதலி என்று...
ஆனந்தத்தில் நான்....
நால்வரில் எவளோ என்று.....

*********

முப்பது வரிகள்
மூன்று வரி ஹைக்கூவானது.
இடம் போதாமையால்...


*********

புது சமையலறை
வாஸ்து வியாதி...
மறந்தார்போல எப்போதேனும்
பழைய அறைக்கே செல்வேன்...
எனைப்போலவே
வந்து வந்து முட்டி நிற்கும்
பழைய சமயலறை எலிகளும்...

Thursday, July 26, 2007

சுற்று முற்றும் பார்த்து
கல் குத்தாத இடமாக பார்த்து, படுத்துக்கொண்ட நேரத்தில்
கேட்கிறது எங்கோ...என்னை விம்ம வைக்கும் பாடல்
"விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே....
.......உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்..."
கடக்....கடக்....கடக்....
முதல் பெட்டியிலேயே மூன்று துண்டானேன்....