ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Monday, January 08, 2007

*கனவுகள்....பரவாயில்லை*


தூக்கம் வராத இரவு

நினைவுகளின்பால் கனவு கண்டேன்

கனவுகளில் நினைவை மறந்த

நிஜமான கனவுகளில்

காதலுக்கும், உறவுகளுக்கும், வேலைகளுக்கும்

பயங்களுக்கும், கற்பனைகளுக்குமாய்....மோதல்கள்

காதலி என் ஆறாம் வகுப்பு நண்பனுடன்

தூக்கிலடப்படும் கைதியாய் நான்

எரியும் நெருப்பிலிருந்து என் இறந்த தாய்

மனதின் குரூரங்கள் காட்சியாய்

இத்தனையும் ஒரே இரவுக் கனவுகளில்

விக்கித்தே முழிக்கும் பெரும்பாலும் என் பகல்கள்

கனவுதானே 'கழுதை கிடக்குது' என்றபடி

கனவுகளை மறந்து கடக்க கவனமாகும்

மூன்று விளக்குகள் உத்தரவிடும்

முச்சந்தியில் வந்து நின்றேன்...

வேடிக்கையாய் பார்த்த ஒரு விரைந்த வண்டியில்....காதலி

என் ஆறாம் வகுப்பு நண்பனுடன்.....

1 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<$I18N$LinksToThisPost>:

Create a Link

<< Home